அதிமுகவின் தற்காலிக புதிய அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக அவர் அதிமுகவில் என்னென்ன பொறுப்பில் பதவி வகித்தார் என்பது குறித்து இதில் தெரிந்து கொள்வோம். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து செயலாற்றிய மூத்த நிர்வாகி தமிழ்மகன் உசேன். 1950களில் எம்ஜிஆர் மன்றத்தை தொடங்கி அனைத்துலக எம்ஜிஆர் மன்றத்தின் கீழ் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றியவர். 1972-ல் திராவிட முன்னேற்ற கட்சியில் […]
