கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவமனை ஊழியர்கள் நோயாளிகளிடம் தொடர்ந்து அடாவடியாக நடந்து வருவதாக சில புகார்கள் வந்தது. இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி காயமடைந்த தம்பதி ஒருவர், அந்த அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அப்போது தம்பதியிடம் ரத்தத்தை கழிவறை சென்று சுத்தம் செய்து வந்தால் தான் சிகிச்சையளிப்பேன் என்று அரசு மருத்துவமனை ஊழியர் கூறியுள்ளார். இதனை அங்கு இருந்தவர்கள் வீடியோவாக பதிவிட்டுள்ளனர். அக்காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. […]
