இஸ்லாமிய மதத்திற்கு எதிராகப் பரவிய காணொலியால் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இஸ்லாமிய மதத்திற்கு எதிராகவும் நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தும் விதத்திலும் ஒரு காணொலி உருவாக்கப்பட்டு சமூக வலைதளத்தில் பரவி வந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இச்செயலைக் கண்டிக்கும் விதமாக காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் டோடா, ரிச்சி மாவட்டங்களில் கடையடைப்புப் போராட்டத்தை நடத்த மத அமைப்புகள் அழைப்பு விடுத்தன. இதையடுத்து, அங்கு […]
