அவசரப் பயணமாக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை காலை 8 மணி அளவில் தமிழக ஆளுநர் டெல்லி செல்ல உள்ளார். இன்று செல்வதாக இருந்த அவரது பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை காலை செல்லும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் பயணமாக நாளை செல்லும் ஆளுநர் நாளை மறுநாள் மீண்டும் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.
