தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. வாகனங்கள் அனைத்தும் மழைநீரின் ஊர்ந்து செல்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் உடனே செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் முன்னெச்சரிக்கை பணிகளை துரிதப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை,தஞ்சை மற்றும் கடலூர் மாவட்டங்களில் தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்புப் படைகள் உள்ளன […]
