வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் யானை ஒன்று சடலமாக கிடந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சீகூர், சிங்காரா, மசினகுடி போன்ற வனப்பகுதிகளில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள், கழுதைப் புலிகள், பிணந்தின்னி கழுகுகள், கரடிகள், மான் போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் சிங்காரா வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பூக்குழி தடுப்பணை அருகே சென்றபோது துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வனத்துறையினர் துர்நாற்றம் வீசிய இடத்தை நோக்கிச் சென்றனர். அப்போது அழுகிய […]
