ஸ்பெயின் நாட்டில் வயதான பெண்மணி ஒருவரின் அழுகிய சடலம் வளர்ப்பு பூனைகள் பாதி தின்ற நிலையில் அதிகாரிகளால் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. மாட்ரிட் நகரில் வசித்து வந்த பெண்மணி ஒருவருடைய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக காவல் துறையினருக்கு அக்கம்பக்கத்தினர் புகார் அளிக்கப்பட்டதையடுத்து திங்கட்கிழமை அவர்கள் விசாரணைக்காக வந்துள்ளனர். இந்நிலையில் கொலம்பியா நாட்டை சேர்ந்தவரும், கடந்த 1996-லிருந்து அந்த குடியிருப்பு பகுதியில் தனித்து வாழ்ந்து வந்தவருமான 79 வயது கிளாரா லென்ஸ் டோபோன் என்பவருடைய சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் வளர்த்து […]
