பள்ளியில் வழங்கப்படும் சத்துணவில் கெட்டுப்போன முட்டைகள் இருந்த விவகாரத்தில் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை அடுத்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டைகள் அழுகிய நிலையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு உணவு பொருட்கள் மற்றும் இருப்பு உள்ள முட்டைகளையும் தரம் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். […]
