சிவகங்கை மாவட்டம் அழகாபுரியில் உள்ள அழகுநாச்சியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் அழகாபுரியில் சிறப்பு வாய்ந்த அழகுநாச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள் நடைபெற்றது. மேலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் செய்யப்பட்டது. விழாவையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு கண்குளிர அருள்பாலித்தார். திருவிழாவை முன்னிட்டு பல்வேறு […]
