ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் இருப்பது அவசியம் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வலியுறுத்தி வருகிறார். அமராவதியில் சட்டப்பேரவையும் கர்னூலில் உயர் நீதிமன்றமும், விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகமும் செயல்படும் என அறிவித்தார். ஆனால்அமராவதி நகருக்கு நிலம் கொடுத்தவிவசாயிகள் இதற்கு கடும் எதிர்ப்புதெரிவித்து வருகின்றனர். ஆனாலும் தனது முடிவில் ஜெகன்மோகன் உறுதியாக இருக்கிறார். சமீபத்தில் இவர் டெல்லி சென்றபோதும் இதுகுறித்து மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் பேசினார். விரைவில் கர்னூலுக்கு உயர்நீதிமன்றம் மாற்றப்படும், பிறகு விசாகப்பட்டினத்திற்கு தலைமைச் செயலகம் மாற்றப்படும் […]
