Categories
உலக செய்திகள்

திடீரென பரவிய காட்டுத்தீ…. 37 பேர் உடல் கருகி பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

காட்டுதீயில் சிக்கி 37 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடான‌ அல்ஜீரியாவில் ஆண்டுதோறும் காட்டுத்தீ பரவுவது வழக்கம். இதேபோன்று தற்போதும் வடபகுதியில் உள்ள 8 மாகாணங்களில் திடீரென காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இந்த காட்டுத்தீயில் சிக்கி 37 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக உள்துறை மந்திரி கமெல் பெல்ஜாத் கூறியுள்ளார். இந்நிலையில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தீயணைப்புத்துறை வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். அதோடு ஹெலிகாப்டர் மூலமாகவும் […]

Categories
உலக செய்திகள்

பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணையவுள்ள அல்ஜீரியா…. அதிபர் வெளியிட்ட அறிவிப்பு…!!!

அல்ஜீரிய நாட்டின் அதிபரான அப்டெல்மட்ஜித் டெபோன் பிரிக்ஸ் கூட்டமைப்பில் தங்கள் நாடு சேரவிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளார். அல்ஜீரியா, ஆப்பிரிக்க கண்டத்திலேயே இயற்கை எரிவாயு அதிகமாக ஏற்றுமதி செய்கிறது. இந்நிலையில், அந்நாட்டு அதிபர், தங்கள் நாடு பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர இருப்பதாக கூறியிருக்கிறார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக பிரிக்ஸ் அமைப்பானது உருவாக்கப்பட்டது. இதில், ரஷ்யாவும் சீனாவும் முக்கிய அங்கமாக இருக்கின்றன. உலகின் பல நாடுகளும் ரஷ்ய நாட்டின் மீது பொருளாதார தடைகளை அறிவித்திருக்கின்றன. இந்நிலையில் ரஷ்ய […]

Categories
உலக செய்திகள்

வேலையில்லா இளைஞர்களுக்கு…. அல்ஜீரியாவில் மாதந்தோறும் உதவித்தொகை… எவ்வளவு தெரியுமா…?

அல்ஜீரியாவில் வேலையில்லாத இளைஞர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 7,500 ரூபாய் உதவித்தொகை அளிக்கப்பட உள்ளதாக அதிபர் அப்டெல்மத்ஜித் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அல்ஜீரிய என்ற ஆப்பிரிக்க நாட்டில் வேலையில்லாமல் அதிகமான இளைஞர்கள் திண்டாடி வருகிறார்கள். அவர்கள் சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகை மற்றும் மருத்துவ காப்பீடு வழங்கப்படவுள்ளதாக அந்நாட்டின் அதிபர் அறிவித்திருக்கிறார். அதன்படி ஒவ்வொரு மாதமும் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு 7,500 ரூபாய் உதவி தொகையாக கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories
உலக செய்திகள்

இதுதான் காரணம்…. மறைந்த முன்னாள் அதிபர்…. உறுதி செய்த அல்ஜீரியா நாட்டு அரசு….!!

வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால் அல்ஜீரியா நாட்டின் முன்னாள் அதிபர் காலமானார். வட அமெரிக்காவில் அல்ஜீரியா நாடு உள்ளது. கடந்த 1999 ஆம் ஆண்டு இந்த நாட்டின் அதிபராக அப்டெலிஸ் ஃபொடிப்லிகா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் அடுத்தடுத்து நடந்த தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று அந்நாட்டின் அதிபராக பதவி வகித்து வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு அல்ஜீரியா நாட்டின் அதிபர் அப்டெலிஸ் ஃபொடிப்லிகா தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என அந்நாட்டு மக்கள் […]

Categories
உலக செய்திகள்

கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ…. அணைக்க போராடிய தீயணைப்பு வீரர்கள்…. 42 பேர் பலியாகிய சோகம்…!!

காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்ஜீரியா நாட்டின் தலைநகர் அல்ஜியர்ஸ் ஆகும். அந்த நகரில் கடந்த திங்கட்கிழமை அன்று திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீயானது அங்கு உள்ள காட்டுப்பகுதி முழுவதும் மிகவேகமாக பரவியுள்ளது. இதனால் அதிகப்படியான கரும்புகை உருவாகி அப்பகுதி முழுவதும் இருளாக காணப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories

Tech |