கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கடந்த 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி கோவிலுக்கு வந்து ஐயப்பனை தரிசிக்கிறார்கள். கடந்த 17-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 6 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். அதன்பிறகு வருகிற 30-ம் தேதி வரை 8,79,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக முன்பதிவு செய்துள்ளனர். […]
