கன்னியாகுமரியில் நேற்று சுற்றுலா பயணிகளில் கூட்டம் அலைமோதியது. பிரபல சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றார்கள். இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அதிகாலையில் திரிவேணி சங்கமம் கடற்கரையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண காத்திருந்தார்கள். ஆனால் மேகமூட்டம் காரணமாக சூரிய உதயம் தெளிவாக தெரியவில்லை. மேலும் காலை நேரத்தில் மழை பெய்தும் மழையை பொருட்படுத்தாமல் முக்கடல் சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் புனித நீராடினார்கள். […]
