செல்போன் டவரில் இருந்து அலைக்கற்றைகளை திருடிய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஒரு தனியார் ஸ்கேன் சென்டருக்கு பின்புறம் இருக்கும் ஒரு வீட்டில் சந்தேகப்படும்படியாக 2 நபர்கள் இருப்பதாக உளவுத்துறை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி உளவுத்துறை காவல்துறையினர் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசாங்கத்திற்கு சொந்தமான BSNL டவரில் இருந்து அலைக்கற்றைகளை திருடியது தெரிய வந்தது. இது குறித்து BSNL அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே […]
