சோழிங்கநல்லூர் மண்டல அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள திருவல்லிக்கேணியை சேர்ந்த முனுசாமி நகரைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் சென்னை மாநகராட்சி சோழிங்கநல்லூர் 15-வது மண்டல அலுவலகத்தில் ஏழு வருடங்களாக அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்த நிலையில் இவர் சரியாக வேலைக்கு வராமல் இருந்திருக்கின்றார். இதனால் சென்ற 5-ஆம் தேதி இவருக்கு அலுவலகத்திலிருந்து மெமோ கொடுக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் சத்தியமூர்த்தி அலுவலகத்திற்கு வந்துள்ளார். நற்பகலில் […]
