தமிழக முதல்வர் அலுவலக தனிச்செயலாளர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் பழனிசாமி அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாமோதரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்தார். இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனிடையே சென்னையில் இன்று காலை நிலவரப்படி கொரோனோவால் பாதித்த 12 பேர் உயிரிழந்துள்ளனர். […]
