தமிழ்நாடு அரசு ஆவணங்கள் பதிவு செய்தல், அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனங்கள், சங்கங்கள், நிறுவனங்கள், சீட்டு நிதி நிறுவனங்கள், பிறப்பு, இறப்பு பதிவு செய்தல் ஆகிய பணிகளை செய்திட பதிவுத்துறை மூலம் மாநிலம் முழுவதும் பதிவு அலுவலகங்கள் அமைத்துள்ளது. தமிழக அரசு பதிவுத் துறை அலுவலகங்கள் மண்டல அலுவலகங்கள், மாவட்டப் பதிவாளர் அலுவலகங்கள், சார்பதிவாளர் அலுவலகங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் இறுதி மாதம் மார்ச் என்பதால் அடுத்த 2022- 2023ம் வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட […]
