மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் ஆண்கள் யாராவது தவறான கண்ணோட்டத்தில் பெண்கள் மீது உரசினால் பேருந்தில் உள்ள அவசர பொத்தானை அழுத்தி புகார் தெரிவிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கல்வி நிலையங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பை கருதி சென்னையில் இயங்கும் சுமார் 1200 மாநகர பேருந்துகளில் இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேருந்துகளில் பயணிக்கும் போது ஆண்கள் தங்களை உரசினால் அல்லது பாலியல் தொல்லை கொடுத்தால் இந்த அவசர பொத்தானை பெண்கள் அழுத்தலாம். […]
