கோவிலில் கொள்ளை அடிக்க முயற்சி செய்த போது அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செங்கப்பள்ளியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அழகுநாச்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு 9 மணி அளவில் பூஜைகள் முடிவடைந்து பூசாரி கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இதற்கிடையே அதிகாலை 2 மணியளவில் மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைக்க முயன்றுள்ளனர். அப்போது கோவிலின் கதவில் பொருத்தப்பட்டிருந்த […]
