அறந்தாங்கி அருகே சாலை விபத்தில் காயம் அடைந்தவருக்கு கல் துகள்களுடன் தையல் போட்டுள்ளனர் அரசு மருத்துவமனை ஊழியர்கள். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருங்குடி ஆணவம் பகுதியை சேர்ந்த மதிவாணன் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது. இதனால் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மதிவாணனுக்கு மருத்துவ ஊழியர்கள் காலில் தையல் போட்டு உள்ளனர். பின்னர் வீட்டுக்கு வந்த மதிவாணனுக்கு தொடர்ந்து காலில் வலி ஏற்பட்டுள்ளது. […]
