புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கருங்குடிக்காடு கிராமத்தில் குடி தண்ணீருக்காக சாலையை கடந்து சென்று கிராம மக்கள் தண்ணீர் எடுத்து வரும் அவல நிலை இருந்துள்ளது. மேல்மங்கலம் ஊராட்சியை சேர்ந்த கருங்குடிக்காடு அம்பலகாரர் குடியிருப்பு பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகள் கடந்த 10 மாதங்களாக ஆழ்குழாய் கிணறு பழுதான நிலையில் உள்ளது. அதனால் காசு கொடுத்து குடிதண்ணீர் வாங்கி உபயோகப்படுத்தும் சூழல் இருந்துள்ளது. இந்நிலையில் நமது செய்தியாளர் கருப்பையா அவர்கள் இது குறித்து […]
