ஆதிச்சநல்லூர் அகழாய்வில் வெண்கல அலங்கார பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே இருக்கும் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பாக அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றது. இந்த நிலையில் ஏற்கனவே தங்க ஆபரணங்கள் கண்டறியப்பட்ட குழியிலேயே தற்போது வெண்கலத்தாலான அலங்கார பொருட்கள் கண்டறியப்பட்டிருக்கின்றது. வெண்கலத்தலான அலங்கார ஜாடியின் மீது ஆடு, மான், நீர் கோழி, நாய், தூண்டில் உள்ளிட்டவை இருப்பது போல வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. ஜாடியின் ஒரு பகுதி சேதம் அடைந்தும் அதன் மீது மான் […]
