பழைய சைக்கிளின் உதிரி பாகங்களை வைத்து செய்யப்பட்ட அலங்கார பொருள் ஆயுர்வேத மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவ கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் தினமும் சிகிச்சைக்கு வந்து செல்வதால் ஆயுர்வேத மருத்துவமனை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் ஆயுர்வேத மருத்துவமனை வளாகத்தில் தொடங்கப்பட்ட உணவகத்தில் பல்வேறு அலங்கார பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக பழைய சைக்கிளின் உதிரிபாகங்கள், […]
