சீன நாட்டில் ஐந்தாம் அறுவடை திருவிழாவை விவசாயிகள் உற்சாகமாக கொண்டாடியிருக்கிறார்கள். சீன நாட்டில் விவசாயிகளை உற்சாகப்படுத்துவதற்காக தொடர்ந்து ஐந்தாம் வருடமாக அறுவடை திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த வருடத்திற்கான வேளாண் கண்காட்சியானது சிங்டு என்ற தென்மேற்கு நகரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. 20 நெல் வயல்களில் வடிவமைப்புகள் செய்து, அறுவடையை பறைசாற்றியுள்ளனர். மேலும், உடற்பயிற்சி போட்டிகளும் விவசாயிகளுக்கு விருது அளிக்கும் நிகழ்ச்சியும் அறுவடை திருவிழாவில் நடக்கிறது. எனவே, விவசாயிகள் உற்சாகமாக இந்த திருவிழாவை கொண்டாடுகிறார்கள்.
