முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள “அம்மா அருங்காட்சியகம்” மற்றும் “அறிவுசார் பூங்கா” ஆகியவற்றின் சிறப்பு அம்சங்கள் பற்றி விளக்குகிறது இந்தச் செய்தி தொகுப்பு. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் சுமார் 80கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பீனிக்ஸ் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவிடத்தில் உள்ளே வருவதற்கு ஒரு வழியும் வெளியில் செல்வதற்கு தனி வழியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு அவருடைய குழந்தை […]
