தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலமாக மாணவர்களுக்கு பாடம் எடுக்கப்பட்டாலும் நேரடி வகுப்புகள்போல் இல்லை. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு முதல் நான்கு வாரத்திற்கு மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வழங்கி வருகிறது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் கவிதா என்ற ஆசிரியை, மாணவர்களுக்கு எளிதில் எழுத்துகளை நினைவூட்டும் வகையில், தமிழ் எழுத்துகளை பாடல் மெட்டில் ஆடிப்பாடி பயிற்றுவிக்கிறார். […]
