Categories
தேசிய செய்திகள்

சரக்கு கையாளுகை குறியீடு… மத்திய தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை…!!!!!

நாட்டின் வளர்ச்சியில் சரக்கு கையாளுகை மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. தொழிற்சாலைக்கு தேவையான மூலப்பொருட்களை வேளாண் நிலங்களில் இருந்தும் வனப்பகுதிகளிலிருந்தும் கொண்டு செல்லப்படுகிறது. தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட பொருளானது விற்பனைக்காக சந்தைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. மூலப்பொருளானது மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாறி வாடிக்கையாளர்களின் கைகளில் சேர்வதில் போக்குவரத்து மிக முக்கிய பங்கை வகித்து வருகிறது. இந்த நிலையில் பொருட்கள் ஒரே இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு துரிதமாக எடுத்துச் செல்லப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. அதில் ஏற்படும் தாமதமானது […]

Categories
மாநில செய்திகள்

வாடகைத்தாய் விவகாரம்… “நயன்- விக்கி விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது”… அமைச்சர் வெளியிட்ட தகவல்…!!!!!

வாடகை தாய் விவகாரத்தில் நயன்தாரா விக்கி மருத்துவமனை விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பாக இவர்கள் இருவரும் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் அறிவிப்பு வெளியிட்டு […]

Categories
உலக செய்திகள்

இதற்கு என்ன காரணம்?…. பிரபல நாட்டில் “மர்மமான முறையில் உயிரிழந்த கங்காரு இனம்”…. விசாரணையில் அதிகாரிகள்….!!!!

பிரபல நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த விலங்குகள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரபல நாடான ஆஸ்திரேலியாவில்  உயிரியல் பூங்கா ஒன்று  அமைந்துள்ளது . இந்த பூங்காவில் ஏராளமான விலங்குகள் வசித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென 8 கங்காருகள், 2  பாறை வலாபிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் இது குறித்து அந்த  பூங்கா செய்தி தொடர்பாளர் கூறியதாவது. இவைகள்  […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே!!… இந்தியாவின் “எதிர்காலமே இந்த திட்டத்தில் தான் இருக்கு” …. தொழில்துறை மந்திரி தகவல்….!!!!

இந்தியாவின் எதிர்காலத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்த காடிசக்தி தேசிய பெருந்திட்டம் தான் தீர்மானிக்கும் என தொழில் துறை மந்திரி தெரிவித்துள்ளார். புது டெல்லியில் பிரதம மந்திரி காடிசக்தி தேசிய பெருந்திட்டதின்  முதலாம் ஆண்டு நினைவை  குறிக்கும் வகையில் ஒரு  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் கலந்து கொண்டார். இதனையடுத்து அவர் கூறியதாவது. சரக்கு போக்குவரத்து திறனை மேம்படுத்துவதன் மூலம் நமது நாட்டில் 1 ஆண்டில்  10 லட்சம் ரூபாய் வரை சேமிக்கப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. தீபாவளியில் “இதை மட்டும் செஞ்சுராதீங்க”…. எச்சரிக்கை விடுத்த காவல்துறை….!!!!

தீபாவளி கொண்டாடுவதற்கான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மக்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சில  அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதில் 1.பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். 2. காலை 6:00 மணி முதல் காலை 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். 3. மேலும் சுற்றுச்சூழல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு புதிய பேருந்துகள்…. இப்படிதான் பிரித்துக் கொடுக்கப்படும்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்திற்கு வாங்கப்படும் பேருந்துகளுக்கான ஒப்பந்தப்புள்ளியை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிய பேருந்துகள் வாங்கப்படும் என தமிழக அரசு கடந்து சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. தற்போது அதற்கான ஒப்பந்தப்புள்ளியை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. அதில் போக்குவரத்து கழகம் சார்பில் 1,771 பிஎஸ் -4 ரக பேருந்துகள்  வாங்கப்பட உள்ளது. அதன் பின்னர் அனைத்து பேருந்துகளும் போக்குவரத்து கழகம் மண்டலத்திற்கு பிரித்து வழங்கப்படும். அதில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 402 பேருந்துகளும், விழுப்புரம் மண்டலத்திற்கு  347 […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம்: 2025 ஆம் ஆண்டு இவ்வளவு கோடி உயருமா?…. வெளியான தகவல்…!!!

இந்தியாவில் விண்வெளி சூழலியல் மேம்பாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மீது கவனம் என்ற தலைப்பில் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்திய விண்வெளி பொருளாதாரத்தில் தனியார் பங்களிப்பையும் ஊக்குவிக்கும் மத்திய அரசின் நேரமறையான திட்டங்களின் காரணமாக இந்தியாவின் செயற்கைக்கோள் செலுத்தும் திட்டம் மிகப்பெரிய வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு 9.6 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம், 2025 ஆம் ஆண்டு 12.8 மில்லியன் டாலராக உயரும் என்று […]

Categories
மாநில செய்திகள்

“இது கட்சிக்கு செய்யும் நம்பிக்கை துரோகம்…. அதிமுகவில் இருந்து “முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் திடீர்நீக்கம்”…. அதிரடியில் இறங்கிய எடப்பாடி ….!!!!

எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதிமுகவில்  முன்னாள் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர்  மைத்ரேய்ன். இவர் கடந்து சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் யாராக இருந்தாலும் சரி கட்சியின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடு என அனைத்திற்கும் முரணாக செயல்படுபவர்களால் கட்சியின் ஒழுங்குமுறை குலையும், இதனால் கட்சிக்கு களங்கம் மற்றும் அவப்பெயர் உண்டாகும். ஆனால் இத்தகைய செயலை தான் தற்போது மைத்ரேயன் செய்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்பவர்களின்… “விரிவான குடியேற்ற சட்டம் அவசியம்”… முதல் மந்திரி பேச்சு…!!!!

கேரள முதல் மந்திரியான பினராயி விஜயன் ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு சுற்று பயணம் சென்றுள்ளார். லண்டன் லோகா கேரளா சபாவின் ஐரோப்பா இங்கிலாந்து மண்டல மாநாட்டை தொடங்கி வைத்துள்ளார். இது தொடர்பாக முதல் மந்திரி அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்புக்காக செல்பவர்களின் பணி பாதுகாப்பு மற்றும் நலனுக்காக விரிவான குடியேற்ற சட்டம் அவசியம். கேரள மக்கள் அனைவரையும் வெளிநாடுகளுக்கு அனுப்புவது அரசின் கொள்கை இல்லை. அதற்கு மாறாக இங்குள்ள வளர்ச்சியின் மூலமாக […]

Categories
மாநில செய்திகள்

விரைவாக பணிகளை முடிக்க வேண்டும்…. ஆய்வு செய்து தலைமைச் செயலாளர்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

சென்னை மாநகராட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னை  மாநகராட்சிக்கு சொந்தமான பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மழை நீர் கால்வாய் பணிகளை தலைமை செயலாளர் நேற்று ஆய்வு செய்தார். இதில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வளங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திப் சக்சேனா, நெடுஞ்சாலைகள் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் அவர் ராஜமன்னார் சாலையில் 4.57 கிலோமீட்டர் நீளத்திற்கும், […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!…. தமிழக போக்குத்துறை ஊழியர்களுக்கு 25% போனஸ்…. அரசு முடிவு என்ன?… வெளியான தகவல்….!!!!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு வழங்கும் போனசை 25% அளவில் முன்கூட்டியே வழங்கி போக்குவரத்து துறை தொழிலாளர்களின் நலன் காக்க வேண்டும் என்று த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் பொது துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு தீபாவளி பண்டிகை முன்னிட்டு காலம் தாழ்த்தாமல் போனஸை வழங்க முன்வர வேண்டும். தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களான மின்சார […]

Categories
தேசிய செய்திகள்

அச்சச்சோ!!…. மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ள சமாஜ்வாடி கட்சித் தலைவர்…. வெளியான தகவல் ….!!!!

முகலாய சிங் யாதவ் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமாஜ்வாடி கட்சியின் நிறுவன தலைவராக உள்ளவர் முலாயம் சிங் யாதவ். இவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இவரை  தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறியதாவது. முகலாயம் சிங் யாதவ் கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு உயிர் காக்கும் மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் பல்வேறு நிபுணர்களை கொண்ட மருத்துவ […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் “கடலுக்கு அடியில் வைக்கப்பட்டுள்ள கன்னிவெடிகள்”…. அமைச்சர்கள் எச்சரிக்கை….!!!!

பிரித்தானிய கடல் படுகையில் ரஷியா கன்னிவெடிகள் வைத்திருக்கிறதா என ஆய்வு செய்து வருகின்றனர். உக்ரைன் மீது ரஷியா கடந்த 7 மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் ரஷியா கடற்பரப்பு தாக்குதலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பிரித்தானிய சக்தி மையங்கள் மற்றும் இணைய சேவை கேபிள்கள் ஆகியவை கடல் நீருக்கடியில் உள்ளதால் அவற்றை ஆய்வு செய்ய வேண்டும் என பிரித்தானிய அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷியாவில் இருந்து ஜெர்மனிக்கு எரிவாயு  கொண்டு செல்லும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில்!! புதிதாக 3 கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!!

மறுக்கப்பட  உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சென்னையில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி  கல்லூரி மற்றும் ஈரோட்டை சேர்ந்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக்  கல்லூரிகள் தன்னாட்சி அந்தஸ்து கோரி அண்ணா பல்கலைக்கழகத்திலும், பல்கலைக்கழகம் மானிய குழுவிலும் விண்ணப்பித்திருந்தது. இந்த விண்ணப்பங்களையும் பரீசீலித்த அண்ணா பல்கலைக்கழகம் தன்னாட்சி அந்தஸ்து பெறுவதற்கான விதிகளை பூர்த்தி செய்யவில்லை எனக்கூறி   கல்லூரிகளுக்கு  தன்னாட்சி அந்தஸ்து வழங்க மறுப்பு தெரிவித்தது. இதனையடுத்து அந்த உத்தரவு  பல்கலைக்கழகம் மானிய குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது […]

Categories
மாநில செய்திகள்

இது தமிழக அரசு செய்யும் நம்பிக்கை துரோகம்…. பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை….!!!!

பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான பகுதி நேர முழு நேர தொகுப்பூதிய விரிவுரையாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அவர்களை நமது தமிழக அரசு திடீரென பணி நீக்கம் செய்துள்ளது. இது ஆசிரியர்களுக்கு அரசு செய்யும் அநீதி. மேலும் நமது தமிழக முதலமைச்சர்  தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி இவர்களின்  பணியை  நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

சிறுவர்கள் bike ஓட்டினால் “பெற்றோர்களுக்கு இதுதான் தண்டனை”…. போக்குவரத்து துறை ஆணையர் எச்சரிக்கை….!!!!

போக்குவரத்து ஆணையர் சிவகுமார் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். புதுச்சேரியில் கடந்த 3  ஆண்டுகளாக விபத்துக்கள் அதிகளவில் நடைபெறுகிறது. இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் சிவகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 2019-ஆம் ஆண்டு  முதல் 2021-ஆம் ஆண்டு வரை 3 ஆயிரத்து 410 சாலை விபத்துக்கள் நடந்துள்ளது. எனவே இருசக்கர வாகனங்களில் 2 பேர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். இதனையடுத்து வாகனம் ஓட்டும்போது செல்போன் உபயோகிப்பது நமது புலன்களின் திறனை 50 சதவீதம் குறைக்கும். […]

Categories
தேசிய செய்திகள்

திடீர் அறிவிப்பு!!…. இந்த தடுப்பூசி இந்தியாவில் பற்றாக்குறை இல்லை…. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை….!!!!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கரோனா தீநுண்மியைப்  போன்ற நிமோனியா கிருமி அல்லது தேன் தீநுண்மி தொற்று நுரையீரலில் ஏற்படுவதால் மூச்சுத் திணறல், காய்ச்சல் போன்ற பிரச்சனை உருவாகிறது. இந்த தொற்றை தடுக்கும் வகையில் நமது இந்தியா நிமோனியா என்று அழைக்கப்படும் தடுப்பூசியை அறிமுகப்படுத்தியது. இந்த தடுப்பூசி குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என இரு வகைகளாக அளிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும்  இத்த தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக மகாராஷ்டிர மாநில சுகாதாரதுறை  […]

Categories
தேசிய செய்திகள்

21 வயதுக்கு முன்பே பெண்களுக்கு திருமணம்… எந்தெந்த மாநிலங்களில் தெரியுமா…? மத்திய அரசு வெளியிட்ட தகவல்…!!!!!

கேரளாவில் திருமணம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிக அளவில் இருப்பதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் தலைமை பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் கடந்த 2020 ஆம் வருடம் 84 லட்சம் பேரிடம் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. அந்த கணக்கெடுப்பில் பெண்களின் திருமண வயது, கருத்தரிப்பு, இறப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் சேமிக்கப்பட்டுள்ளது. இதன் அறிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டுள்ளது அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, நாடு […]

Categories
மாநில செய்திகள்

ராஜராஜ சோழன் பற்றிய சர்ச்சை: பர்ஸ்ட் கோழியா?… இல்ல முட்டையா?…. நடிகர் சரத்குமார் பதிலடி….!!!!

ராஜ ராஜ சோழன் இந்துவா எனும் சர்ச்சை வலுத்து வருகிறது. அதேநேரம் ஆதரவும் ஒருசேர வலுத்து வருகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள நடிகர் சரத்குமார் மாமன்னன் ராஜராஜ சோழனின் புகழ் பரப்புவோம் உலகறியச் செய்வோம் என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாமன்னன் ராஜ ராஜசோழன் இந்துவா?, சைவமா?, வைணவமா?, சைவம் இந்துமதமா? என்று சர்ச்சையாக இப்போது சென்றுகொண்டிருக்கிறது. குரங்கில் இருந்து வந்தவன் மனிதன் ஆவார். அதேசமயம் மனிதகுரங்கு எதில் இருந்து வந்தது..? […]

Categories
உலக செய்திகள்

அது நினைத்து பார்க்க முடியாத வலி…. பிரபல தொழிலதிபர் “பில்கேட்ஸ் முன்னாள் மனைவி வேதனை”…

விவாகரத்து என்பது நினைத்து பார்க்க முடியாத வலி என பிரபல தொழிலதிபரின்  முன்னாள்  மனைவி கூறியுள்ளார். உலக பணக்காரர்களில்  பில்கேட்சும் ஒருவர். இவர் கடந்த 1994-ஆம் ஆண்டு மெலிண்டா  பிரஞ்ச் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3  குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கடந்த ஆண்டு விவாகரத்து பெற்று  பிரிந்து வாழ்கின்றனர். ஆனால் இவர்கள் உருவாக்கிய அறக்கட்டளையில் இருவரும் சேர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மெலிண்டா பிரபல செய்தி நாளிதழ் நிறுவனத்திற்கு சிறப்பு பேட்டி ஒன்றை […]

Categories
மாநில செய்திகள்

9 ஆண்டுகளாக இவர்கள் வாடுகிறார்கள்…. இதற்கு முழு காரணம் தமிழக அரசே….. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை…..!!!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ் கடந்த திங்கட்கிழமை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாட்டில் நெட்  தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு  மீண்டும் போட்டி தேர்வு நடத்தி பணி நியமனம் வழங்கப்படும் என நமது தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதனால் அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் போராடுவது நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி தான். ஆனால் அதற்கு அரசு பதில் அளிக்காது மிகவும் ஏமாற்றத்தை […]

Categories
மாநில செய்திகள்

தூய்மை நகரங்கள் குறித்த அறிக்கை வெளியிட்ட மத்திய அரசு… தமிழகம் பின்னடைவு… ஓபிஎஸ் கடும் கண்டனம்…!!!!!

தூய்மை நகரங்களின் பட்டியலில் தமிழ்நாடு பின் தங்கியிருப்பதற்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து  இது தொடர்பாக திங்கட்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, திடக்கழிவு மேலாண்மை பொது கழிப்பிடங்களின் தூய்மை, தெருக்களில் அசுத்தம் போன்றவை பற்றி மக்களால் அளிக்கப்பட்ட புகார்கள் மற்றும் அதன் மீது ஊராட்சி அமைப்புகள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி ஒரு ஆய்வினை மேற்கொண்டு அதன் அடிப்படையில் இந்தியாவில் உள்ள தூய்மை நகரங்கள் பற்றி அறிக்கையின் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் […]

Categories
உலக செய்திகள்

எங்களுக்கு அரசு உதவ வேண்டும்….. மருத்துவமனைகளில் குவியும் மக்கள்…. பாகிஸ்தான் அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!!

பிரபல நாட்டில் பெய்த கனமழையால் மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவி வருகிறது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த 4  மாதங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தற்போது பாகிஸ்தான் மெல்ல மீண்டும் வரும் நிலையில் பல மாகாணங்களில் மலேரியா நோய் பரவி வருகிறது. கடந்த ஜூன் மாதம் முதல் மேக வெடிப்பு ஏற்பட்டு பல்வேறு மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அதில் குறிப்பாக ஆகஸ்டில்  கொட்டிய கனமழையால்  கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. ஒரே ஆண்டில் குறைந்த குற்ற சம்பவங்கள்….. அதிரடி நடவடிக்கையில் திருச்சி போலீசார்….!!!!

திருச்சி மாநகர காவல் ஆணையர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருச்சியில் உள்ள மாநகர காவல் ஆணையர்  கார்த்திகேயன் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் நமது மாநகரில் கடந்த 2020-ஆம் ஆண்டு போதை பொருள் விற்பனை உள்ளிட்ட பல குற்றச்செயல்களில் ஈடுபட்ட  40 நபர்கள் மீதும், 2021-ஆம் ஆண்டு 85 நபர்கள் மீதும், இந்த ஆண்டு 142 நபர்கள் மீதும் குண்டர் காவல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

“இது ப்ளோரிடாவிற்கு ஏற்பட்டு நெருக்கடி அல்ல. அமெரிக்காவிற்கு ஏற்பட்ட நெருக்கடி”… அமெரிக்க ஜனாதிபதி கருத்து…!!!!

ப்ளோரிடாவை தாக்கிய சக்தி வாய்ந்த புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை தாக்கிய மிக சக்தி வாய்ந்த புயல்களில் ஒன்றான இயான் புயல் தாக்கியதில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40க்கு மேல் அதிகரித்துள்ளது. அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான புயல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. அந்த நாட்டின் ஃப்ளோரிடா மாகாணத்தை தாக்கியுள்ளது இந்த நிலையில் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் கேயோ கோஸ்டா எனும் கடற்கரை பகுதி அருகே  இயான் சூறாவளிப்புயல் […]

Categories
மாநில செய்திகள்

ஊழியர்களே உஷாரா இருங்க…. இனி ரேஷன் அரிசி கடத்தினால் இதுதான் தண்டனை…. தமிழக அரசு அதிரடி உத்தரவு ….!!!!!

முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது  நமது முதலமைச்சர் ரேஷன் கடைகளில் மக்களுக்கு தரமான உணவுப் பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறார்.  மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைகள் உள்ள பகுதிகளில் கூடுதலாக கடைகளை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம். இந்நிலையில் ஏராளமான ஊழியர்கள் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுகின்றனர். எனவே அவர்களை பிடிப்பது நமது தமிழக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

செல்வ மகளை பெற்றெடுத்த பெற்றோருக்கு ஹேப்பி நியூஸ்…. கலெக்டர் வெளியிட்ட முக்கிய ‌ அறிவிப்பு….!!!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாத ரெட்டி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள போஸ்ட் ஆபீஸில் செல்வமகள் சேமிப்பு திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழா அக்டோபர் 11-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த செல்வமகள் சேமிப்பு திட்டமானது பெண் குழந்தைகளின் நலனை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பெண் குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ரூபாய் 250 செலுத்தி கணக்கை தொடங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் குறைந்த பட்சம் 250 […]

Categories
மாநில செய்திகள்

செமயாக கல்லாகட்டும் சென்னை மெட்ரோ…. ஜனவரி டு செப்டம்பர் வசூல் எவ்வளவு தெரியுமா?…. வெளியான அறிவிப்பு….!!!!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னையில் உள்ள மக்களுக்கும் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஒரு நம்பகமான, பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. ஒவ்வொரு மாதம் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்து அறிக்கையை சென்னை மெட்ரோ நிர்வாகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 2022 செப்டம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 61.12 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளனர். அதனை போல இந்த ஆண்டின் ஜனவரி 1ஆம் […]

Categories
மாநில செய்திகள்

“பொங்கல் பரிசு தொகுப்பில் பருப்பு, பாமாயிலா” அமைச்சர் சக்கராபாணி திடீர் விளக்கம்….!!!!

தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். சக்ராபாணி பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் கணக்கு படித்தும் கணக்கு தெரியாத ஒருவரும், சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயற்சித்து கைதான ஒருவரும் பொங்கல் பரிசு தொகுப்பை குறித்து பேசியுள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பில் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகிக்கப்படவில்லை. அப்படி இருக்கும்போது பருப்பு மற்றும் பாமாயில் விநியோகித்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என தவறான அறிக்கை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இவர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“போதை பொருள் விற்பனை” உடனே தகவல் தெரிவியுங்கள்…. டிஎஸ்பியின் முக்கிய அறிவிப்பு….!!!!

போதைப்பொருள் விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம் என டிஎஸ்பி கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தின் டிஎஸ்பியாக பாலாஜி சரவணன் இருக்கிறார். இவர் தற்போது ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் மாவட்டம் முழுவதும் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்களை ஒழிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் போதை பொருளை தடுப்பதில் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதன் பிறகு மக்கள் அனைவரும் சமுதாயத்தின் மீது அக்கறை உள்ளவர்களாக தங்களுடைய […]

Categories
தேசிய செய்திகள்

இனி பெட்ரோல், டீசல் வேண்டுமென்றால்…. இந்த சான்றிதழ் கட்டாயமாக வேண்டும்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படுகிறது. டெல்லியில் போக்குவரத்து துறை அமைச்சர் கோபால் ராய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 29-ஆம் தேதி மாசு கட்டுப்பாடு சான்றிதழ் கட்டாயம் என்பது குறித்து  ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் சுற்றுச்சூழல், போக்குவரத்து, போலீசார் என பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் கட்டாயமாக்குவது மற்றும் நடைமுறைப்படுத்துவது குறித்த ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில்  காற்று மாசுபடுவதற்கு  வாகனங்களில் […]

Categories
உலக செய்திகள்

மிஸ்டர் புதின் நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம்…. நாங்கள் தொடர்ந்து தடைகளை விதிப்போம்…. அமெரிக்க ஜனாதிபதி பேட்டி….!!!!!

ரஷியாவிற்கு எதிராக தடைகளை தொடர்ந்து அமெரிக்கா விதிக்கும் என ஜனாதிபதி ஜோ  பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியான ஜோ பைடன் செய்தியாளர்களிடம் அறிக்கை ஒன்றை அளித்துள்ளார். அதில் ரஷிய அதிபர் புதின் உக்ரைன்  நாட்டின் மீது நடத்தி வரும் தாக்குதல் உலக நாடுகளை அச்சுறுத்துகிறது. மேலும் அவரின் பொறுப்பற்ற வார்த்தைகள் மற்றும் அச்சுறுத்துதகளால் அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் பயப்பட போவதில்லை. மேலும் புதினின்  இந்த செயல்பாடுகள் அவர் போராடிக் கொண்டிருப்பதை தான் காட்டுகிறது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. அமெரிக்கா-ரஷியா இடையே அணு ஆயுதம் கட்டுப்பாடு தொடர்பான ஒப்பந்தம்…. வெளியான தகவல்….!!!!!

 பிரபல 2 நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ரஷியா ஆகிய நாடுகளுக்கு இடையே அணு ஆயுதம் கட்டுப்பாடு தொடர்பான ஒப்பந்தம் போடப்படுகிறது. இந்த ஒப்பந்தம் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும்  பயன்படுத்தக்கூடிய வகையில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை வரம்புகளை தீர்மானிக்கவும், ஒருவருக்கொருவர் அணு ஆயுதங்களை சரிபார்த்தல் மற்றும் ஆய்வு செய்வதற்கான விதிமுறைகளை கோடிட்டுக்  காட்டுவதாகவும் அமைந்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் […]

Categories
உலக செய்திகள்

இது ஐநா சாசனத்திற்கு எதிரானது…. உக்ரைன் பகுதிகளை இணைக்கும் ரஷியா …. எதிர்ப்பு தெரிவிக்கும் உலக நாடுகள்….!!!!

உக்ரைனில்  கைப்பற்றப்பட்ட பகுதிகளை ரஷியாவுடன் இணைப்பதற்கான நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. உக்ரைன்  நாட்டின் மீது ரஷியா கடந்த ஏழு மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ரஷியப்படைகள் பெரும்பான உக்ரைன்  பகுதிகளை கைப்பற்றினர். அதில் 4 பிராந்தியங்களை அதிகாரப்பூர்வமாக ரஷியாவுடன் இணைக்கப்படும் என அதிபர் புதின் அறிவித்தார். இதற்கு  உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் இந்த நாலு பிராந்தியங்களையும் அதிகாரப்பூர்வமாக ரஷியா தன்னுடன்  இனைப்பதற்கான விழா இன்று அதிபர் மாளிகையில் கோலாகரமாக நடைபெற்றது. இந்த […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை பெருநகர் காவல் துறையின் சார்பில்….. கேட்பாரற்று கிடந்த 695 வாகனங்கள் ஏலம்…. வெளியான அறிவிப்பு…..!!!!

சென்னை பெருநகர காவல் துறையின் சார்பில் நேற்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் சென்னை பெருநகர காவல் துறைக்கு உட்பட்ட பகுதிகளில் கேட்பாரற்று கிடந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 595 மோட்டார் சைக்கிள், 11 ஆட்டோக்கள் மற்றும் 1 கார் என மொத்தம் 695 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் புதுப்பேட்டை பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை பொது ஏலத்தில் விடுவதற்கு காவல்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

இனி தேர்தலில் “குற்றம் செய்தால் போட்டியிட முடியாது”…. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்….!!!!

குற்றம் செய்தவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாரத ஜனதா கட்சியை சேர்ந்தவர் வக்கீல் அஸ்வினி  உபாத்யாய். இவர்  சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை  தாக்கல்  செய்திருந்தார். அதில் கடுமையான குற்றங்கள் செய்து அதற்காக கோர்ட்டில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள் தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும். மேலும் இதற்கு மத்திய அரசும், தேர்தல் கமிஷனுக்கும்  உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் அவர் கூறியிருந்தார். இந்த […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

மக்களே இனி கவலை இல்லை…. ஆவணங்களை பதிவு செய்ய மொபைல் இருந்தால் போதும்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!!

திருமண சான்றிதழ் பெறுவதற்கு இணைய வழி மூலம் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை உள்ள தலைமைச் செயலகத்தில் திருமண சான்றிதழை இணைய வழியில் திருத்தம் செய்யும் மற்றும்  ஆவணங்களை பதிவு செய்யும்  தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு இந்த புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் இதில் அமைச்சர் பி,மூர்த்தி பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் வே .இறையன்பு, வணிகவரி மற்றும் பதிப்பு துறை செயலாளர் பா. ஜோதி […]

Categories
தேசிய செய்திகள்

2021-22 ஆம் வருடம் உள்நாட்டுப் பயணிகளால் அதிகம் பார்வையிடப்பட்ட.. மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்…!!!!

நாடு முழுவதும் மத்திய அரசால் பாதுகாக்கப்படும் கட்டணம் வசூலிக்கும் நினைவுச் சின்னங்கள் ஏராளமானவை அமைந்துள்ளது. அதில் ஒன்றாக ஆக்ராவில் உள்ள யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற தாஜ்மஹால் விளங்குகிறது. இந்த சூழலில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் டெல்லியில் நடைபெற்ற விழாவில் இந்திய சுற்றுலா புள்ளி விவரங்கள் 2022 என்னும் பெயரில் 280 பக்கங்கள் கொண்ட அறிக்கையை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் 2021- 2022 ஆம் வருடத்தில் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவுடன் இணையும் உக்ரைன் பகுதிகள்… “செப்டம்பர் 30 புதின் அறிவிப்பு”…? பிரிட்டன் உளவுத்துறையினர் அச்சம்…!!!!!

உக்ரைனில் தங்கள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை தங்களுடன் இணைத்துக் கொள்வதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரஷ்ய அதிபர் புதின் வெள்ளிக்கிழமை வெளியிடுவார் என பிரிட்டன் உளவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இது பற்றி பிரிட்டன் பாதுகாப்பு துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ரஷ்யாவுடன் தங்கள் பகுதிகளை இணைப்பது தொடர்பாக ஆக்கிரமிப்பு உக்ரைன் பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய சர்ச்சைக்குரிய பொது வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்துள்ளது. இந்த சூழலில் ரஷ்ய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிபர் புதின் வரும் வெள்ளிக்கிழமை […]

Categories
உலக செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. கனடாவை தோற்கடித்து “சிறந்த நாடு பட்டத்தை வென்ற சுவிட்சர்லாந்து”…. வெளியான வருடாந்திர அறிக்கை….!!!!

உலகின் மிகச்சிறந்த நாடாக சுவிட்சர்லாந்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் உலகில் உள்ள நாடுகளில் எந்த நாடு சிறந்தது என்பது பற்றி வருடாந்திர அறிக்கை வெளியிடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த வருடம் us news கடந்த 27-ஆம் தேதி சிறந்த நாடுகளின் வருடாந்திர அறிக்கையை வெளியிட்டது. அதில் உலகின் சிறந்த நாடுகளாக வரிசைப்படுத்த வாழ்க்கை தரம், சக்தி, கலாச்சாரம், செல்வாக்கு, பாரம்பரியம் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2021 -ஆம் ஆண்டு சிறந்த நாடுகளுக்கான வரிசையில் கனடா முதலிடத்தை […]

Categories
உலக செய்திகள்

என்றும் நாங்கள் ஆதரவளிப்போம்…. ஐ.நா. கவுன்சிலில் சேர முயற்சி செய்யும் இந்தியா….. இலங்கை அதிபர் தகவல்….!!!!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக சேர்வதற்கு என்றும்  நாங்கள் ஆதரவளிப்போம்  என இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார். ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர்  ஷின்சோ  அபே  உயிரிழந்தார். இவரின் இறுதிச் சடங்கு டோக்கியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது. இதில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டார். பின்னர் அவர் அந்நாட்டு  வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை குறித்து  அதிபர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சர்வதேச அளவில்  எங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இனி திருப்பதியில்…. சில்லறை நாணயங்களை வீசக்கூடாது…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!!

திருப்பதி கோவிலின் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் ஏ.வி  தர்மா ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருப்பதி வெங்கடாஜலபதி சுவாமி கோவில் உலக  புகழ் பெற்றதாகும். இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது  வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நடைபெறுகிறது. இது குறித்து தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் ஏ.வி. தர்மா ரெட்டி நிபுணர்களிடம் அறிக்கை ஒன்றை  அளித்துள்ளார். அதில் பிரம்மோற்சவ விழா தற்போது நடைபெறுகிறது.  அதில் தினமும் காலை மற்றும் இரவில் நான்கு […]

Categories
மாநில செய்திகள்

இதனால் எப்படி ஏழைகள் பாதிக்கப்படுகிறார்கள்?….. விரைவில் வெளியாகும் ஆம்னி பேருந்து கட்டண விவரம்…. அமைச்சர் தகவல்….!!!!

ஆம்னி பேருந்துகளின் கட்டண விவரம் விரைவில் வெளியாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் 27 -ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால்  வெளியூர்களில் வசித்து வரும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். ஆனால் ஆம்னி பேருந்துகள் கட்டண உயர்வை அதிகரித்துள்ளது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று  நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை  அமைச்சர்  கலந்து கொண்டார். பின்னர் அவர்  செய்தியாளர்களை சந்தித்துக் கூறியதாவது. தற்போது உயர்ந்துள்ள ஆம்னி பேருந்து கட்டண உயர்வு […]

Categories
மாநில செய்திகள்

ஓராண்டில் 4.92 லட்சம் பேருக்கு புதிதாக ஓய்வூதியம்… மேலாண்மை துறை அமைச்சர் அறிக்கை வெளியீடு…!!!!!

கடந்த ஓராண்டில் மட்டும் 4.92 லட்சம் பேருக்கு புதிதாக ஓய்வூதியம் வழங்க உத்தரவிடப்பட்டிருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். இது பற்றி திங்கள்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த அதிமுக ஆட்சியில் 2014 -15 ஆம் வருடம் மட்டும் ஓய்வூதியம் பெற்று வந்த 4.38 லட்சம் பேர் தகுதியற்றவர்களாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2015 -2016 முதல் 2020- 2021 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

“அவருக்கு கணக்கு கூட தெரியாது” …. சரமாரியாக கேள்வி எழுப்பிய அமைச்சர் பி.டி.ஆர்….!!!!

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அமைச்சர் பழனிவேல்    தியாகராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தமிழ்நாட்டில் மின் கட்டணம், சொத்து வரி போன்றவை உயர்த்தப்பட்டு இருப்பதால் அரசின் வரிவாய் அதிகரித்துள்ளது என கூறியுள்ளார். இந்நிலையில் மின் கட்டணம், சொத்து வரி வருமானம் போன்ற அனைத்தும் தமிழ்நாட்டு அரசு வருகிறது? அதுவும் இந்த ஆண்டு அதிகரிக்கப்பட்ட கட்டணம் எப்படி கடந்த ஆண்டு பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறையை குறைக்க செய்யும். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நச்சு சக்திகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவோம்”…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

தி.மு.க எம்.பி ஆ. ராசாவும், அமைச்சர் பொன்முடியும் அண்மையில் பேசிய பேச்சு சர்ச்சைக்குள்ளானது. அதிலும் குறிப்பாக பொன்முடியின் பேச்சு பல பேருக்கு முகம் சுளிக்கவைத்துள்ளது. அதுமட்டுமின்றி அனைத்து தரப்பினருக்குமான ஆட்சி என கூறிவிட்டு, பெண்கள் மட்டும் பேருந்தில் ஓசியில் போகிறீர்கள் என்று பொதுவெளியில் பொன்முடி பேசிய வீடியோ சமுகவலைதளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு இக்கொள்கைகளின் வழியே சமத்துவ சமுதாயத்தை அடையவேண்டும் என்ற உயர்ந்த இலட்சிய […]

Categories
அரசியல்

பாஜக பிரமுகர்கள் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. “தமிழக அரசிடம் அறிக்கை கேட்டிருக்கிறோம்”.. மத்திய மந்திரி தகவல்…!!!!!

தமிழகத்தில் மட்டும் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தவில்லை எனவும் 10 மாநிலங்களில் சோதனை நடத்தியதாகவும் மத்திய இணை மந்திரி பானு பிரதாப் சிங் வர்மா தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் பாஜக ஓபிசி அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய சிறு, குறு தொழில்துறை இணை மந்திரி பானு பிரதாப் சிங் வர்மா பங்கேற்றுள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து பேசிய அவர், பாஜக பிரமுகர்கள் வீடுகள் மீது பெட்ரோல் கொண்டு வீசப்பட்டது பற்றி தமிழக […]

Categories
அரசியல்

“அவசர குடுக்கையாக எதிர்க்கட்சித் தலைவர் விட்டிருக்கும் அறிக்கை”… அழுவதா?. சிரிப்பதா?… அமைச்சர் துரைமுருகன் பேச்சு…!!!!!

எதிர்க்கட்சித் தலைவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை பார்த்து அழுவதா? சிரிப்பதா?  தெரியவில்லை என்று நீர்வளத் துறை அமைச்சர் முருகன் கூறியுள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி முதல்வராக இருந்த போதும் எதிர்கட்சித் தலைவராக சட்டப்பேரவையில் அமர்ந்திருந்த போதும் நிதானத்தோடு தான் நடந்து கொண்டிருந்தார். அவரது கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக தடுமாறி போயிருக்கிறார். மேலும் நிதானம் தவறு இருக்கிறார் என்பது அவர் வெளியிட்ட 25/9/202248 அறிக்கையின் மூலம் […]

Categories
மாநில செய்திகள்

எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?…. உண்மை நிலையை மக்களுக்கு கூற வேண்டும்…. மக்கள் நீதி மய்யம் கேள்வி….!!!!

மக்கள் நீதி மய்யம்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம்  சார்பில் நேற்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் நமது இந்திய நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி கடந்து 2019 -ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடி கல்லை  நாட்டினார். ஆனால் பணி தொடங்கப்பட்டு 3  ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்நிலையில் சுற்றுச்சூழல் தவிர வேறு எந்த ஒரு கட்டுமான பணியும் தொடங்கப்படவில்லை. ஆனால் பூர்வாங்கத்  திட்டமிடல் பணிகள் இறுதி நிலையை எட்டியுள்ளதாகவும் […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களுக்கு தோல்வி என்பது ஒரு பாடம்…. நடைபெற்ற பட்டமளிப்பு விழா…. கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி….!!!!!

டிஜி வைணவக்  கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கத்தில் டிஜி வைணவக்  கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 55-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்டார். மேலும் இதில் கல்லூரியின் செயலாளர் அசோக்குமார், முதல்வர் எஸ். சந்தோஷ், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆர். வெங்கட்ராமன், கல்லூரியின் துணைத் தலைவர் கோபால் அகர்வால் அசோக், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் […]

Categories

Tech |