தமிழகத்தில் நேற்று சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இன்று 2-வது நாளாக சட்டப்பேரவை தொடங்கியுள்ள நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அறிக்கையை நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை குழு சமர்ப்பிப்பித்தது. அந்த அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய போராட்டக்காரர்களுக்கு எந்த விதமான முன்னெச்சரிக்கை அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை. போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட கலவரத்தில் போராட்டக்காரர்கள் ஓடிக் கொண்டிருக்கும் போதே போலீசார் துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்துள்ளனர். இந்த கலவரத்தை கட்டுப்படுத்துவதற்கு உயர் […]
