அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இந்த திருக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆறு தினங்களில் திருக்கோவில் வளாகத்திலேயே தங்கி விரதம் இருந்து சூரசம்காரத்தை கண்டு விரதம் முடிக்கின்றார்கள். இந்த நிலையில் 2021 2022-ம் வருடம் இந்து சமய அறநிலைய துறையின் மானிய கோரிக்கையில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் 150 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் […]
