தமிழகத்தில் உள்ள கோவில்களில் அறநிலையத்துறை ஊழியர்களை கோவில் பணி ஊழியர்களாக நியமித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.ஆர்.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி முன் விசாரணைக்கு வந்த போது மனுதாரர், அறங்காவலர்களுக்கு மட்டுமே கோவில் ஊழியர்களை நியமிப்பதற்கு அதிகாரம் உள்ளது. இந்த விஷயத்தில் அறநிலையத்துறை ஆணையருக்கு எந்த விதமான அதிகாரமும் கிடையாது. தமிழகத்தில் சுமார் 19,000 கோவில்களில் அறங்காவலர்களே இல்லை என்று கூறப்பட்டது. ஆனால் அரசு தரப்பில், உள்ளாட்சி […]
