செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு இவர்கள் மேலும் புத்தாக்கம் பெற்றிருக்கிறார்கள். ஒருபுறம் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி இந்து சமய அறநிலையத் துறை மூலமாக, அவர்கள் சிவராத்திரி போன்ற விழாக்களை கோவில்கள் மூலமாக அறநிலையத் துறை மூலமாக அரசு விழாவாகவே நடத்துகிறார்கள், அதிலே மாண்புமிகு தமிழக முதலமைச்சருடைய துணைவியார் சென்று கலந்து கொள்கிறார்கள். நாங்கள் சிவராத்திரி நடத்துகிறோம், நாங்கள் ஆன்மீகவாதிகளுக்கு எதிரானவர்கள் அல்ல […]
