கால்பந்தின் அரையிறுதியில் மொரோக்கா அணி தோல்வியடைந்ததால், கோபடைந்த ரசிகர்கள் கலவரத்தை உண்டாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக கோப்பை கால்பந்தின் அரை இறுதிப் போட்டியானது கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் மொராகோ அணியானது, பிரான்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. இதனால், மொராக்கோ ரசிகர்கள் வருத்தமடைந்தார்கள். மேலும் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் கலவரத்தை உண்டாக்கினர். காவல்துறையினர் மீதும் கற்களை தூக்கி எறிந்தார்கள். மேலும் பெல்ஜியத்தில் காவல்துறையினர் மீது மொராக்கா ரசிகர்கள், பட்டாசுகளை கொளுத்தி போட்டனர். […]
