பர்கூர் பகுதியில் தொடர் மழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பர்கூர் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் ஈரெட்டியில் சுமார் 100 அடி உயரமான அருவி உள்ளது. அதில் எப்போதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வரும். இந்நிலையில் அருவியில் கோடை காலத்தில் குறைவாகவும், மழைக் காலத்தில் அதிகமாகவும் தண்ணீர் கொட்டும். தற்போது பெய்த மழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. […]
