Categories
மாநில செய்திகள்

சுற்றுலா பயணிகளுக்கு ஷாக் நியூஸ்…… அருவிகளில் குளிக்க தடை…..!!!!

ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக காவேரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து 8,000 கனஅடியில் இருந்து 10,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் தடை விதித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் குளிக்க அனுமதி…. சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…!!!!

நெல்லை மாவட்டத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மணிமுத்தாறு அருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க கடந்த 2 வருடங்களாக தடை விதிக்கப்பட்டிருந்தது. மற்ற சுற்றுலா தலங்களை போல பாபநாசம், மணி முத்தாறு அருவிகளுக்கும் செல்ல அனுமதி வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் நெல்லை மாவட்டம் பாபநாசம், அகஸ்த்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் இன்று முதல் சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

Categories

Tech |