நன்றாக படித்து நல்ல பணியில் சேர்ந்து கை நிறைய சம்பாதித்து திருமணம் செய்து செட்டில் ஆவது இன்றைய இளைஞர்களின் கனவு ஆகும். இதனை மட்டுமே குறிக்கோளாக வைத்து செயல்படுவதில் ஏராளமான இளைஞர்கள் இருக்கின்றனர். இவர்களை போன்று நன்றாக படித்து நல்லதொரு பணி கிடைத்து வெளிநாட்டில் லட்சக் கணக்கில் சம்பாதிக்கும் வாய்ப்பு பெற்ற 23 வயது ஒரு கிராமத்து இளைஞர் விவசாயம் மீதான ஆர்வத்தால் வேலையை விட்டு அருப்புக்கோட்டை அருகில் சந்தையூரை சேர்ந்த கற்குவேல் விவசாயம் செய்து வருகிறார். […]
