தனியார் பேருந்து மீது அரிவாளை வீசிவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் குமுளியில் இருந்து தேனியை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. இந்த பேருந்தை க.புதுபட்டியை சேர்ந்த சாம் என்பவர் ஒட்டி வந்தார். அப்போது போடேந்திரபுரம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் ஒருநபர் பேருந்துக்கு வழிவிடாமல் சென்று கொண்டிருந்தார். இதனால் பேருந்து ஓட்டுனர் சாம் அந்த நபரை கண்டித்துள்ளார். இதனையடுத்து டிரைவருக்கும் அந்த நபருக்கும் […]
