அரிவாளால் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கச்சேரி தளவாய்புரம் பகுதியில் சுடலைமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வன் என்ற மகன் உள்ளார். கடந்த 19.9.2021 அன்று கலைச்செல்வன் தன்னுடைய பிறந்தநாளை தனது நண்பர்களுடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் சீட்டில் கேக் வைத்து அரிவாளால் வெட்டி கொண்டாடியுள்ளார். இதனை செல்போனில் வீடியோவாக எடுத்து பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையில் சமூக […]
