மதுரையில் உள்ள சிவன் கோவிலில் கண்டறியப்பட்ட அரியவகை மண்ணுளிப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். மதுரை மாவட்டம் விளாங்குடி பகுதியில் இருக்கின்ற சுடுகாட்டில் மயான சிவன் கோயில் ஒன்று இருக்கின்றது. அந்த கோவிலின் கருவறையில் இருக்கின்ற சிலைக்கு பின்புறமாக ஒரு அரிய வகை மண்ணுளிப்பாம்பு இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் பின்னர் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின்பேரில் சிவன் கோயிலுக்கு விரைந்து வந்த வனத்துறையினர், சிலையின் பின்புறம் இருந்த மண்ணுளிப் பாம்பை மீட்டு அதனை நாகைமலை […]
