தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் உள்ள ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், திருச்சி, அரியலூர், நாகை, உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது […]
