உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் நிலையில் தி.மு.க. பிரமுகர் கடையில் 150 அரிசி மூட்டை இருப்பதாக அதிமுகவினர் புகார் கொடுத்து வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி நகராட்சியில் 21 வார்டுகளில் உள்ள கவுன்சிலர் பதவிகளுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளன. இந்த தேர்தலுக்காக வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம் செய்துவருகிறார்கள். இதற்கிடையே வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க 3 பறக்கும் படையினர் சுழற்சி முறையில் […]
