சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே சரக்கு வாகனம் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ரேஷன் அரிசி மூடைகள் சிதறி கிடந்தன. சிவகங்கை மாவட்டத்தில் சரக்கு வாகனம் ஒன்று மானாமதுரையில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதையடுத்து அந்த வாகனம் பாப்பான்குளம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென்று சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில் வாகனத்தில் இருந்த அரிசி மூட்டைகள் சாலையில் சிதறி விழுந்தன. அந்த வாகனத்தின் டிரைவர் சங்கரபாண்டியன் (24) அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து அவர் […]
