செங்கல்பட்டு மாவட்டத்தில் தாயை இழந்த நாய் குட்டிகளுக்கு கோழி தாயாக மாறியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள செய்யூரில் ஜெகன் என்பவரது வீட்டில் ஐந்து குட்டிகளை ஈன்ற நாய் பிரசவத்திற்கு பிறகு பத்து நாட்களில் இறந்துவிட்டது. கண்களை கூட திறக்காத நாய் குட்டிகளை அதே வீட்டில் இருக்கும் கோழி அரவணைத்து பாதுகாப்பதுடன் மற்ற விலங்குகள் நாய்க்குட்டிகளை நெருங்க விடாமல் விரட்டி அடிக்கின்றது. இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றுள்ளனர்.
