நெதர்லாந்து அரண்மனை வட்டாரங்கள் கொரோனா தொற்றால் முன்னாள் ராணியார் பீட்ரிக்ஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. நெதர்லாந்து அரசரின் தாயார் பீட்ரிக்ஸிடம் ( வயது 83 ) கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டதாக அவருடைய குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து அரண்மனை வட்டாரங்களும் முன்னாள் ராணியார் பீட்ரிக்ஸ் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் செவ்வாய்க்கிழமை அன்று பட்டத்து இளவரசி அமலியா 18 வயதை எட்ட உள்ளார். இந்நிலையில் முன்னாள் ராணியார் […]
