பிரபல நடிகை ராஷி கண்ணா தமிழ் பேச தீவிரமாக கற்று வருகிறேன் என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான இமைக்கா நொடிகள், அடங்கமறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராஷி கண்ணா. இப்படங்களை தொடர்ந்து இவர் தற்போது அரண்மனை மூன்றாம் பாகத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் இப்படத்தில் நடித்த ஒரு சில அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “இந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பளித்த சுந்தர் சி, […]
