இளவரசர் ஹரியை திருமணம் செய்த பின் அரச குடும்பத்தில் முதல்முறையாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய அனுபவத்தை மேகன்மார்கல் வெளிப்படுத்தியுள்ளார். மேகன் அண்ட் ஹரி என்னும் தலைப்பில் நெட்பிலிக்ஸ் ஆவண படத்தில் மேகன்மார்கலே தனது திருமணத்திற்கு பின் பிரிட்டிஷ் அரச குடும்பத்துடன் தனது முதல் கிறிஸ்மஸ் கொண்டாடியதை நினைவுகூர்ந்துள்ளார். அதில் அவர் “எனக்கு சாண்ட்ரிங் ஹாமில் நடைபெற்ற முதல் கிறிஸ்துமஸ் பண்டிகை மிகவும் தெளிவாக நினைவிருக்கிறது. என் அம்மாவை தொலைபேசியில் அழைத்தபோது, அவர் அங்கு எப்படி இருக்கிறது? என கேட்டார். […]
