கரூர் மாவட்டத்தில் அரசு மினி பேருந்து சேவையை போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். கரூர் காந்திகிராமத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அரசு மருத்துவக்கல்லூரியை மையமாக கொண்டு கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து புலியூர் வரை இருவழித்தடங்களில் மினி பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கரூர் பேருந்து நிலையத்திலிருந்து லைட் ஹவுஸ், சுங்க கேட், மருத்துவக்கல்லூரி, காந்தி கிராமம் […]
