அரசு மருத்துவமனைக்கு புதிதாக 20 இரு சக்கர நாற்காலிகளை துப்பாக்கி நிறுவனத்தின் அதிகாரிகள் வழங்கியுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது. இந்நிலையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மருத்துவமனை நிர்வாகம் உள்ளது. இதனால் சமூக பங்களிப்பு நிதி மூலம் அரசு மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்களை வாங்க திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை நிறுவனமானது முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளின் பயன்பாட்டிற்காக 20 சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளது. […]
