அரசு மருத்துவக்கல்லூரிகளில் பணியாற்றி வந்த பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கும் வகையில், தருமபுரி, ஈரோடு, பெரம்பலூர் உள்ளிட்ட மூன்று மாவட்ட அரசு மருத்துவமனைக்கு தற்காலிக புதிய டீன்களை நியமனம் செய்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார். திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் பூவதி, தருமபுரி மருத்துவக்கல்லூரி டீனாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் மணி, ஈரோடு மருத்துவக்கல்லூரி டீனாக நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் தீரணிராஜன், பெரம்பலூர் மருத்துவக்கல்லூரி […]
