அரசு பேருந்து மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மாமண்டூர் பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு வீட்டிற்கு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு நோக்கி சென்ற அரசு பேருந்து காமராஜ் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த காமராஜ் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் காமராஜை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
