சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவர் 200 ஆடுகளை வேப்பூர் பகுதிக்கு ஓட்டி வந்து தங்கியுள்ளார். நேற்று முன்தினம் லட்சுமணன் ஆடுகளை மேய்ச்சலுக்காக எலவனாசூர்கோட்டையிலிருந்து வேப்பூர் நோக்கி ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வேகமாக வந்த அரசு பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஆடுகள் கூட்டத்திற்குள் நுழைந்தது. இதனால் ஆடுகள் நாலாபுரமும் சிதறி ஓடியது. ஆனாலும் 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. மேலும் மோட்டார் சைக்கிளில் […]
